சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்
அத்திவரதர் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே இந்த சோமநாதர் கோவில் குறித்துப் பதிவிட நினைத்தேன். ஆளுநர் ரவி அதற்கானத் தேவையை தற்போது உருவாக்கிவிட்டார். ______ பிராமணியம் மக்களின் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி அவர்களைக் கட்டுப்படுத்தவும் சுரண்டவும் செய்தது என்பதற்கான சிறந்த உதாரணம் குஜராத்தின் சோமநாதர் கோவிலில் உள்ள மிதக்கும் சிவலிங்கச் சிலை. மனித வரலாற்றின் குறிப்புகளில் தொடர்ந்து மக்களின்மீது மோசடியாகத் திணிக்கப்பட்டுவரும் பல தந்திரங்களின் மூலம் மக்களின் செல்வத்தையும் கண்ணியத்தையும் கொள்ளையடிக்கும் முயற்சிகளில் சோமநாத சிலைத் தந்திரம் மிக வெற்றிகரமான, தனித்துவமான ஒன்றாக இருக்கின்றது. அறிவியல்ரீதியாக மேம்படுத்தப்பட்ட ஒரு மிதக்கும் காந்தசக்தி தொழில்நுட்பத்தின் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டாலும், அச்சிலை அதன் தெய்வீகத்தன்மை காரணமாகத் தானே அந்தரத்தில் மிதப்பதாகத் தவறாகச் சித்திரித்தனர். இந்த அதிசயத்தைக் கட்டணம் செலுத்திக் காண்பதற்காக பக்தர்கள் வெகுதொலைவிலிருந்து வந்தனர். இருப்பினும், கிபி 1024-ல் சுல்தான் முகமது கஜினியின் படை அக்கோவிலைக் கைப்பற்றியபோது அச்சிலையின் ரகசியம் கண்டுபிடிக்கப்பட...